மாணவர் சேர்க்கையை கண்காணிக்க புதிய நடைமுறை..! துவங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி..!

மாணவர் சேர்க்கையை கண்காணிக்க புதிய நடைமுறை..!  துவங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி..!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக்கல்வி இயக்குனரகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்காக முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள தகவல் மற்றும் உதவி மையத்தை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்...

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படுவதால் தற்போது வரை விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை கிடைக்கப்பெறவில்லை விண்ணப்பிக்கும் காலம் முடிந்தவுடன் தெரியவரும் அப்பொழுது தெரிவிப்போம், எனவும் கடந்த ஆண்டு விட நடப்பாண்டில் விண்ணப்பங்கள் அதிக அளவில் வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்...

தகவல் மையத்தை திறந்து வைத்து மேடையில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி,

அனைவரும்  தமிழ்மொழியை பயிலவேண்டும் என கூறினார். "தமிழ் மொழி பாடங்கள் படிக்கும் போதே பாரதியை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.  மேலும், மருத்துவம்,பொறியியல் என எது படித்தாலும் தமிழ் நன்றாக தெரிய வேண்டும்", என்று அறிவுறுத்தினார்.  

 இதையும் படிக்க      }  கள்ளச்சாராய விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - முதலமைச்சர் அதிரடி!

மேலும், மாணவர் சேர்க்கையில் எந்தவித தவறும் நடந்து விட கூடாது என்கிற காரணத்தினால் இந்த தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தகவல் மையம் மூலம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளதாகவும் கூறினார். மேலும், இந்த தகவல் மையம் மூலம் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது...

அதோடு, அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது...சந்தேகங்கள் தகவல் கேட்கும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் தகவல் மையம் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகள் பற்றிய விவரங்களையும் தகவல் மையம் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 இதையும் படிக்க      } " கர்நாடகா முதலமைச்சர் யார்..? இன்று இரவு அறிவிப்பு வெளியாகும் என தகவல்....!