அண்ணா சாலையில் புதிய மேம்பாலம்: அரசாணை வெளியீடு..!

அண்ணா சாலையில் புதிய மேம்பாலம்: அரசாணை வெளியீடு..!

சென்னை அண்ணா சாலையில் 621 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக  அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.  

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படுவதற்காக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் நாள்தோறும் அதிகரித்துவரும் போக்குவரத்தினால் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தொலைவு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ. டி கல்லூரி சாலை சந்திப்பு. செனெடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. சாலை சந்திப்புக்களை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் உயர்மட்டச் சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து ஆலோசித்து சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் எனவும் முதற்கட்டமாக 100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க    | சாலையோரம் அமர்ந்திருந்த நபருக்கு கொடுமை செய்த பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!