நியூட்ரினோ திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

நியூட்ரினோ திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நியூட்ரினோ திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது  - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

நியூட்டினோ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்ப்பில் தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்பாயம் சுற்றுசூழல் அனுமதி மற்றும் வன உயிரி பாதுமைப்பு அமைப்பிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பின்னர் திட்டத்தை செயல்படுத்தலாம் என தெரிவித்து, திட்டத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது. 

இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்ப்பில், கடந்த 2019ம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பான வழக்கு விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு மிகவும் முக்கிய என்பதால், நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என  தமிழ்நாடு அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.