திமுகவின் தேர்தல் அறிக்கைகளை பின்பற்றும் அண்டை மாநிலங்கள்..!!

திமுகவின் தேர்தல் அறிக்கைகளை பின்பற்றும் அண்டை மாநிலங்கள்..!!

திமுக மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ஆல்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கலந்து கொண்டார்.

குறிப்பாக, வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம், உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி  அமைப்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா  உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இதில், திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் காணொளி காட்சி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சில அறிவுரைகளை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கினார்

குறிப்பாக, கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றபடுவீர்கள் எனவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் பணிகள் விரைவில் முடிக்க வேண்டும் என்ற அவர், உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் உண்டு என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பணிகளை துரிதாக செய்ய வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளின் நலன் சார்ந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் செயலாற்ற வேண்டும் எனவும் மேலும், சுணக்கமாக செயல்படும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்க இருப்பதால் ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் திமுகவின் தேர்தல் அறிக்கைகள் வாக்குறுதிகளை அண்டை மாநிலத்திலும் பின்பற்றுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   போதை பொருட்களை தடுத்து நிறுத்துமா சமுத்ராகுப்த்...?!