நீலகண்ட பிள்ளையார் கோவில் வீடியோ வைரல்: வேலியே பயிரை மேய்ந்த அவலம்!  

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில்  நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் பணத்தை பூசாரியே திருடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகண்ட பிள்ளையார் கோவில் வீடியோ வைரல்: வேலியே பயிரை மேய்ந்த அவலம்!   

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில்  நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் பணத்தை பூசாரியே திருடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில்  நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் நகை வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மாதம் ஒருமுறை அறநிலை துறை அதிகாரிகள் முன்பாக பேராவூரணி முடப்புளிக்காடு கிராமத்தார்கள் முன்னிலையிலும் சங்கரன் வகையறா முன்னிலையிலும் இந்த காணிக்கைகளை எண்ணுவது வழக்கம். ஆனால் கடந்த 28ஆம் தேதி கோயில் நிர்வாகிகளும் கோயில் பூசாரிகளும் கோயில் அலுவலகத்தில் கோயில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட உண்டியலை திறந்து அந்த காணிக்கைகளை  எண்ணிக் கொண்டிருந்தனர்.

அப்போது கோயிலில் பூசாரியாக இருக்கும் வேளார் முருகேசன் என்பவர் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்போது கத்தையாக பணத்தை எடுத்து சட்டைப்பைக்குள் வைப்பது போன்ற காட்சிகள் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதை அறிந்த நிர்வாக அதிகாரி சிதம்பரம் அவர்கள் இந்த வீடியோ  பார்த்து அதிர்ச்சி அடைந்து கோயில் காணிக்கையை திருடிய பூசாரி வேளார் முருகேசனை வரவழைத்து விசாரித்து இருக்கின்றனர். இதை ஒப்புக் கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை மேலும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.