தடுப்பூசி செலுத்திகொண்டதால்தான் நடிகர் விவேக் உயிரிழந்தாரா?

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.   

தடுப்பூசி செலுத்திகொண்டதால்தான் நடிகர் விவேக் உயிரிழந்தாரா?

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையுலகம் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காமெடி மூலமும் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொன்ன ஒரு நல்ல சிந்தனை கொண்ட கலைஞரின் மறைவு மக்கள் மத்தியில் மீளா துயரத்தை ஏற்படுத்தியது.  

இந்த நிலையில், நடிகர் விவேக் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்ற கேள்வியும் அப்போது எழுந்து சர்ச்சை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனிடையே விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்தார் என்று புகார் தெரிவித்துள்ளார். அதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்றுள்ளது. விரைவில் விவேக் மரணத்தில் உள்ள உண்மை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.