"இந்தியாவின் தேசிய கடவுள் மகா துர்கா" ஆளுநர் கருத்து!

"இந்தியாவின் தேசிய கடவுள் மகா துர்கா" ஆளுநர் கருத்து!

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் வழிபடக்கூடிய மகா துர்கா இந்தியாவின் தேசிய கடவுள் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். 

சென்னை தி.நகரில் உள்ள பெங்கால் அசோசியேஷனில் நடைபெற்ற துர்கா பூஜையில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார். அங்கு மேற்கு வங்காளத்தில் உள்ளது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்த துர்கா கடவுளை வணங்கினார். பின்னர் மேற்கு வங்க முறைப்படி கலை நிகழச்சிகள் நடைபெற்றது. 

பின்னர் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெங்கால் அசோசியேசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும்  மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என கூறினார். கலாச்சாரம், மொழிகளை கடந்து இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. பெங்கால் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் மிகவும் பழமைவாய்ந்த மொழிகள்.
 
மேற்குவங்கம் மற்றும் தமிழகத்தின் என இரு  கலாச்சாரம், இருமொழி, இருமக்களின் இணைவுகள் தான் இந்த விழா என தெரிவித்தார். இரு மொழிகளும் மிகவும் வலிமையானது. இந்த இரு கலச்சாரம் மற்றும் இந்த மொழி பேசும் மக்களை இணைந்து பார்பது தான் நமது பாரத்தின் ஆன்மா என தெரிவித்தார்.மகா துர்கா இந்தியாவின் தேசிய கடவுளாக உள்ளார் என கூறினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வசிக்கும் அனைத்து மக்களும் இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இது நம்முடைய கலாச்சாரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. எப்போதெல்லாம் நாடு பிரச்சனைகளை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் துர்காவின் ஆசிர்வாதத்தால் நாடு மீண்டு எழுந்துள்ளது. நம்முடைய வலிமை மற்றும் அடையாளம் தான் மகா சிவராத்திரி என தெரிவித்தார்.

மகா சிவராத்திரி விழாவை மேற்கு வங்கத்தில் கொண்டாடுவது போல் வேறு யாரும் கொண்டாடுவதில்லை. மகா சிவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் மேற்கு வங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள பெங்காலி மக்கள் தமிழ் நன்றாக பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அதேபோல் காசியில் உள்ள தமிழ் மக்கள் சரளமாக ஹிந்தி பேசுகின்றனர். இந்தியாவில் உள்ள எந்த பகுதி சென்றாலும் அது தனது இல்லத்தைப் போல உள்ளது.தனது பாட்டி இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு சென்று இருக்கிறார் எனது சிறுவயதில் அவர்கள் இதனை கதையாக தங்களுக்கு கூறுவார் என அவர் பேசினார். இந்தியாவில்உள்ள பல மக்கள் காசி முதல் ராமேஸ்வரம் சென்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

வந்தே மாதரம் பாடலை எழுதிய வங்காள கவிஞர் வங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் துர்காவை பாரத் மாதா என கூறிப்பிட்டார் என ஆளுநர் கூறினார். நாம் வெவ்வேறு உணவுகளை உண்டாலும், நாம் வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு உடைகளை உடுத்தினாலும் இந்தியாவில் எந்த பகுதியில் வசித்தாலும் மகா துர்கா ஒன்று தான் என கூறினார். 

"செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள் " -என்ற மகாகவி  பாரதியின் பாடலலில் உள்ளது போல நாம் பல மொழிகள் பேசினாலும் நம் இதயத் துடிப்பு ஒன்றுதான் இது தான் பாரதம் என கூறினார். நமது பாரதம் கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு சவால்களை துர்காவின் துணையோடும் ஆசியோடும் மீட்டு வந்துள்ளோம் என தெரிவித்தார்.

புதிய பாரதம் வளர்த்து வரும் இந்த நேரத்தில் துர்காவின் ஆசி வேண்டும் என அவர் கூறினார். தஞ்சாவூரில் வசிக்கும் லட்சக்கணக்கான மாராட்டிய மக்கள் சரளமாக தமிழ் பேசுகின்றனர்.

இதையும் படிக்க:மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு!