நடராஜர் கோயில் விவகாரம்: கால அவகாசம் வழங்கி உத்தரவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விஜய்குமார், கங்கா பூர்வாலா முன்பு தமிழக அரசு பிறப்பித்த நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வது குறித்து அராசணை எண்: 115- பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக கோயில் கோயில் ஆர்வலர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த நீதி பேராணை எண்: 20467 /2023 மனு குறித்து புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் தருண், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக அரசு சார்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் அருண் நடராஜன் ஆஜராகி தனது தரப்பு எழுத்து பூர்வமான  ஆட்சேபனை மற்றும் ஆவனங்களை பதிவு செய்தார். நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் சார்பில் கோயில் வழக்குரைஞர் சந்திரசேகர், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஹரிசங்கர், வர்ஷா சந்திரசேகர் ஆகியோர் ஆஜரானார்கள்.

அரசு தரப்பில் தாக்கல் செய்த ஆட்சேபனை மற்றும் ஆவனங்களுக்கு பதில் அளிக்க கோயில் தரப்பில் கால அவகாசம்  கோரப்பட்டது. தலைமை நீதிபதி அதனை ஏற்று வழக்கினை  வேறு தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்க்க விசாரணை முடிந்த பின் சிதம்பரத்தைச் சேர்ந்த எம்.என்.ராதாகிருஷ்ணன் தனது வழக்குரைஞர் கனகராஜ் மூலம் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.