' நம்ம ஊரு சூப்பரு' திட்டம்...பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி... !

சீர்காழி அருகே ' நம்ம ஊரு சூப்பரு' திட்டம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி... சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் பேரணியை துவக்கி வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..!

' நம்ம ஊரு சூப்பரு' திட்டம்...பிளாஸ்டிக் ஒழிப்பு  விழிப்புணர்வு பிரச்சார பேரணி... !

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பாக 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இன்று விளந்திடசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை  சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு துவக்கி வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் எனவும், நமது கிராமத்தை நாம் நினைத்தால் மட்டுமே அழகாக வைத்துக் கொள்ள முடியும் எனவும், கூறியுள்ளார். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் எனவும்  பிரச்சாரம் செய்துள்ளார். இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்புராயன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன்,  மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்து குபேரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி, மகளிர் சுய உதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.