முதுகுளத்தூர் : ஸ்ரீதர்மமுனிஸ்வரர் ஸ்ரீ பெரிய கருப்பணசாமி கோவில், மஹா கும்பாபிஷேக விழா ...!

முதுகுளத்தூர் அருகே ஸ்ரீதர்மமுனிஸ்வரர் ஸ்ரீ பெரிய கருப்பணசாமி கோவில், மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முதுகுளத்தூர் : ஸ்ரீதர்மமுனிஸ்வரர் ஸ்ரீ பெரிய கருப்பணசாமி கோவில், மஹா கும்பாபிஷேக விழா ...!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர், ஸ்ரீ பெரியகருப்பணசாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை, விக்னேஷ்வர பூஜை, சோடசமகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கியது.

இன்று காலை முதல், நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி, ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் மற்றும் ஸ்ரீ பெரியகருப்பணசாமி ஆலய வளாகத்தில் உள்ள வாழ்முனி, சாட்டைமுனி  சிவகாளி, பதினாறுபிள்ளை காளி, ராக்கச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் விமான கோபுர கலசத்திற்கும் மற்றும் சால கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

சிவாச்சாரியர் கல்யாண சுந்தரம் தலைமையில் சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு மேள தாளங்கள் மற்றும் மங்கள இசையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேகம் முடிந்த பின் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் மற்றும் ஸ்ரீ பெரிய கருப்பணசுவாமிகளுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீர், திரவியம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மஹா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பொது அன்னதானம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் கீழச்சாக்குளம், ஏனாதி, கண்டிலான், மேலச்சாக்குளம், பூங்குளம், ஒருவானேந்தல் , இ. நெடுங்குளம், இளஞ்சம்பூர், பூக்குளம், முதுகுளத்தூர், கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பொதுமக்கள் பங்கேற்று ஸ்ரீ தர்மமுனிஸ்வரர் மற்றும் ஸ்ரீ பெரியகருப்பணசாமியை வழிபாட்டு சென்றனர்.