அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி புதுச்சேரியில் பல்வேறு கட்சிகளை சார்ந்த 100 க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி  வருகின்றனர்.

இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 100 க்கும் மேற்பட்டோர் சுதேசி பஞ்சாலை அருகே மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராணுவத்தின் பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கக்கூடிய அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.