பருவமழை முன்னேற்பாடு: தலைமைச் செயலாளர் ஆலோசனை..!

பருவமழை முன்னேற்பாடு:   தலைமைச் செயலாளர் ஆலோசனை..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குள்ள நிலையில்,.. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சாலை பராமரிப்பு, மருத்துவம், போக்குவரத்து காவல்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி, மெட்ரோ குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் அந்த பாதிப்புகளை தடுக்க பல்வேறு துறைகள் இணைந்து முன்னெச்சரிக்கை  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது. பருவ மழையின் போது பாதிப்புகளை குறைப்பதற்காக என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. 

அப்போது, மழைநீர் வடிகால் பணி எந்த அளவிற்கு முடிவு பெற்றுள்ளது, மழை நேரங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்வது, நீர் நிலைகளில் இருக்க கூடிய ஆகாயத்தாமரை அகற்றுவது, மழைகளில் குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் பார்த்து கொள்வது, மழை காலங்களில் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுபடுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக அந்த அந்த அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் கேட்டறிந்தார்.

இதையும் படிக்க    | “மனிதர்களால் மனிதக்கழிவுகள் அள்ளப்படுவதை ஒழிக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன்” - அண்ணாமலை