தமிழக அரசியல்வாதிகளிடையே ஆர்.எஸ்.எஸ், பாஜக கொள்கைகள் குறித்து  தவறான புரிதல்- பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக அரசியல்வாதிகளிடையே ஆர்.எஸ்.எஸ், பாஜக கொள்கைகள் குறித்து  தவறான புரிதல் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளிடையே ஆர்.எஸ்.எஸ், பாஜக கொள்கைகள் குறித்து  தவறான புரிதல்- பாஜக தலைவர் அண்ணாமலை

இந்து முன்னணி நிறுவன தலைவர் இராம கோபாலன் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சீராத்தோப்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, மதம் மாறுவதற்கான காரணத்தை ஆராய்ந்தவர் இராம.கோபாலான் என கூறினார்.

ராம கோபாலன் இல்லை என்றால் தமிழகத்தின் நிலையை நினைத்து கூட  பார்க்க முடியாது என கூறிய அவர்,  அவரது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடியது என்று முதலமைச்சர் ஸ்டாலினே கூறியதாக குறிப்பிட்டார்.  

ஆர்.எஸ்.எஸ்,  சித்தாந்தம் குறித்த இங்கு உள்ள அரசியல் வாதிகளுக்கு நாம் விளக்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.