மிஸ் சென்னை திருநங்கை போட்டி - முதலிடம் பெற்ற பிரகதி சிவம் !

மிஸ் சென்னை திருநங்கை போட்டி - முதலிடம் பெற்ற பிரகதி சிவம் !

விழுப்புரத்தில் நடைபெற்ற கூவாகம் திருவிழா போட்டியில் மிஸ் சென்னை திருநங்கையாக சேலத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க : தாண்டியா நடனமாடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்... !

இதில் அமைச்சர் பொன்முடி, பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்தார். மேலும், நடிகை வரலட்சுமி, நடிகர் பிருத்திவிராஜ் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் திருநங்கைகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, மிஸ் திருநங்கை போட்டி நடைபெற்றது. இதில் சேலத்தை சேர்ந்த திருநங்கை பிரகதி சிவம் முதலிடத்தையும், சென்னை வைஷீ 2-ம் இடத்தையும், தூத்துக்குடி மியூலா 3-ம் இடத்தையும் பெற்றனர்.