சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் - ன் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்...!

சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் - ன் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்...!

அவிநாசி - அத்திக்கடவு திட்டம், போராடி வரும் செவிலியர்களை நிரந்தப்படுத்துவது, அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர்க்கு இலவச பயணம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டபேரவையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். 

எடப்பாடி பழனிசாமி கேள்வி :

தமிழ்நாடு சட்டபேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், அதிமுக கொண்டு வந்த திட்டத்தை திமுக கிடப்பில் போட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திகடவு - அவினநாசி திட்டம் அதிமுக கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக ஆமை வேகத்தில் பணி நடைபெறுவதாக சாடினார்.

அமைச்சர் முத்துச்சாமி பதில் :

அப்போது குறுக்கிட்டு பேசிய வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துச்சாமி , விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வந்த பணி மழை காரணமாக தாமதமானதாவும், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான முழு பணிகளும் நடப்பு மாதத்திலேயே  நிறைவு பெறும் எனவும் அமைச்சர் முத்துசாமி பதிலளித்தார்.

நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் :

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்த செவிலியர்களை  நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க : சுபஸ்ரீ மரணத்தில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும்... உறுதியளித்த முதலமைச்சர்...!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் :

இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணி நிரந்தரம் செய்ய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஒப்புதல் வழங்காது எனவும், காலி பணியிடங்கள் நிரப்பும் பட்சத்தில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார். 

இலவச பயணம் :

தொடர்ந்து, அனைத்து நகர பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பெண்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கோரினார்.

அமைச்சர் சிவசங்கர் பதில் :

இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், அனைத்து நகரப் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருவதாகவும், பேருந்தை அடையாளம் காட்ட  பிங்க் நிறம் அடிக்கப்பட்டதாகவும் கூறினார்.