கன்னியாகுமரியில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை நோில் ஆய்வு செய்த அமைச்சர்!

கன்னியாகுமரி மாவட்டம் வைக்கல்லூா் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை அமைச்சா் மனோ தங்கராஜ் பாா்வையிட்டாா்.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகள் தண்ணீரில் மூழ்கி பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்று தண்ணீர் கடலில் கலக்கும் பகுதியான வைக்கல்லூர் பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் இருந்த இரண்டு வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் இந்த பகுதியில் தொடர்ச்சியாக மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை தடுக்கும் பொருட்டு ஆற்றில் கரையில் பக்கச்சுவர் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் 7 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பணியை துவக்கி வைத்தார்.