இந்திய வரைபடத்தில் தொலைந்து போன மீனவ கிராமங்கள் ;"மீண்டும் சேர்க்கப்படும்" அமைச்சர் ரகுபதி உறுதி!

இந்திய வரைபடத்தில் தொலைந்து போன மீனவ கிராமங்கள் ;"மீண்டும் சேர்க்கப்படும்" அமைச்சர் ரகுபதி உறுதி!

இந்திய வரைப்படத்தில் விடுபட்ட 512 மீனவ கிராமங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாகையில் நடைப்பெற்ற மீனவர் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைப்பெற்றது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், விழுந்தாமாவடி, காமேஸ்வரம், பட்டினச்சேரி, நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். இதில் மீனவர்களுக்கு வழங்க கூடிய டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் முன் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்திய வரைப்படத்தில் இருந்து 512 கிராமங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து மத்திய அரசிடம் பேசி வரைப்படத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் , மீனவர் நலத்துதுறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிக்க:இமயமலை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!