அமைச்சர் பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்தின் மீதான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

அமைச்சர் பி.டி.ஆர்.   ஆடியோ விவகாரத்தின் மீதான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது . 

தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து மதிப்பு குறித்து முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அப்போது 30000 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பான இந்த  ஆடியோ  குறித்த உண்மைத் தன்மையை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பிரனேஷ் ராஜமாணிக்கம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

 இந்த மனுவின் மீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி, அரசியல் காரணங்களுக்கு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.  

மேலும் இந்த வழக்கில், கிரிமினல் சட்டவிதிகளின் கீழ்  போதிய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று இருக்கும்போது, நீதிமன்றத்தை அரசியலுக்கான தளமாக பயன்படுத்தக் கூடாது என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்து அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். 

இதையும் படிக்க  |  1000 பேருந்துகள் கொள்முதல்: மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும் ...அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!!