வேலைநேர சீர்திருத்த மசோதா...! அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப் பேரவையில் தாக்கல்...!!

வேலைநேர சீர்திருத்த மசோதா...! அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப் பேரவையில் தாக்கல்...!!

தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்ட திருத்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு, தொழில்துறை உற்பத்தி நிறுவனங்களின் மையமாக விளங்குகிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் நிறைந்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 

தொழிலாளர்கள், குறிப்பாக பெண் பணியாளர்களுக்கு ஓய்வு இடைவேளைகளை உள்ளடக்கிய கூடுதல் நேரம், நீடிக்கப்பட்ட நேரங்கள், எளிதில் பின்பற்றுகிற வகையில் வேலை செய்யும் நேரங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு ‌ தொழிலாளர்களின் நன்மைக்கு ஏதுவாக சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலகங்கள் மூலம் அரசுக்கு விண்ணப்பங்கள் வந்தன.

அந்த விண்ணப்பங்களை ‌ பரிசீலனை செய்து ‌1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தினை திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட மசோதா பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சட்ட மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.