100 அடியை தாண்டிய மேட்டூர் அணை நீர் மட்டம்... தொடர் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...

மேட்டூர் அணை நீர் மட்டம் 101 அடியாக உயர்ந்துள்ளது

100 அடியை தாண்டிய மேட்டூர் அணை நீர் மட்டம்... தொடர் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று முன் தினம்  வினாடிக்கு  13 ஆயிரத்து, 477  கன அடியாக இருந்த அணையின் நீர் வரத்து,  39 ஆயிரத்து, 634   கன அடியாக அதிகரித்தது. தற்போது, மழை தீவிரம் குறைந்ததால் நீர் வரத்து 21ஆயிரத்து, 390 கன அடியாக குறைந்து வருகிறது. 

இருப்பினும் நீர்  வெளியேற்றம் குறைவாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று  காலை  அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டிய நிலையில், இன்று,  காலை 101 புள்ளி 05 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 66.20 டி. எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம்  100 அடியை எட்டியது, இந்த ஆண்டில் முதல் முறையும், அணையின் வரலாற்றில் 67-வது முறையும் ஆகும். அணையின் நீர் மட்டம் 100 அடியை கடந்துள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.