மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய மெட்ரோ ரயில் சேவை...!

சென்னையில் தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரிசெய்யப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயல்புக்கு வந்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய மெட்ரோ ரயில் சேவை...!

சென்னையில் கோயம்பேடு இயக்க கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நேற்று மாலை 4:30 மணியிலிருந்து மெட்ரோ ரயில் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் சென்னையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு, மீண்டும் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என  மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்தநிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரிசெய்யப்பட்டு, மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இன்று காலை 5 மணி முதல் அனைத்து வழிதடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இயங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது