"கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்" மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு! 

"கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்" மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு! 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று கூடுதலாக இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை கடற்கரை தாம்பரம் இடையேயான மின்சார ரயில் பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில் சேவை காலை 10.18 மணி முதல் மதியம் 2.45 மணி வரையிலும் மற்றும் தாம்பரம் - சென்னை கடற்கரை வரையிலான ரயில் சேவை காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதனால் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இன்று கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் முதல் சென்னை சென்ட்ரல் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இன்று கூடுகிறது... தமிழ்நாடு அமைச்சரவை!