மெகா தடுப்பூசி முகாம்: ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்... இலக்கையும் தாண்டி அசத்தல்!  

தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மெகா தடுப்பூசி முகாம்: ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்... இலக்கையும் தாண்டி அசத்தல்!   

தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. 

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டன. நேற்றைய சிறப்பு முகாம் நடைபெற்றதையொட்டி அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பே இதற்கான முன் ஏற்பாடுகள் செய்யும் பணி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செய்யப்பட்டது. இதனால் தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட ஆர்வம் காட்டினர். நேற்று ஒரே நாளில் 20 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர முயற்சியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சம் தடுப்பூசி என்ற இலக்கு விரைவாகவே எட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.