மயிலாடுதுறை: தார் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்..! 

மயிலாடுதுறை:  தார் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்..! 

சாலையை சீர் செய்வதாக கூறி செம்மண் சாலையாக மாற்றி ஆறு மாதத்தை கடந்தும் தார் போடாத காரணத்தால் பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழ்ப்பட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அருணா நகர் என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வேன்கள் அருணா நகர் பகுதியில் சென்று வருகின்றன. 

இந்த பகுதியில் சாலையை புதிதாக போடுவதாக கூறி கப்பி சாலை அமைத்து அதன் மேல் செம்மண்ணை கொட்டி விட்டு ஆறு மாத காலமாக தார் போடவில்லை இதன் காரணமாக தனியார் பள்ளி வாகனங்கள் செல்லும் பொழுது புழுதி பறந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில்  படிக்கின்றன. மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக மாறி காணப்படுவதால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் வாகனத்துடன் வழுக்கி கீழே விழும் நிலைமை உருவாகியுள்ளது.

கடந்த மழைக்காலத்திலேயே இதுகுறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நமக்கு நாமே திட்டத்தில் இந்த சாலை போடப்படுவதாக கூறி சாலையை மேல் தார் ஊற்றவில்லை இந்நிலையில் பள்ளி வாகனங்களை மாற்று வழியில் செல்ல வேண்டும் என்று கூறியும் சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான வாகன நெரிசல் ஏற்பட்டு மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் தார்சாலையாக மாற்றுவதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க   |  விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் , செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்!