மெரினா உயிர் காக்கும் பிரிவு ஒத்திகை நிகழ்ச்சி

மெரினா உயிர் காக்கும் பிரிவு  ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கடலில் குளிக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க "மெரினா உயிர் காக்கும் பிரிவு" ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏடிஜிபி சந்தீப் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும உயர் அதிகாரிகள்,தீயணைப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்!


மெரினா உயிர் காக்கும் பிரிவு குழுவினர் கடற்கரையில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்பதற்கான ஒத்திகை செய்து காட்டினர்.இந்த ஒத்திகையில் ஸ்டாண்டப் பாட்லிங்,அதிவிரைவு படகு HDPE, ரெஸ்கூப் tube, ஜெட்ஸ்கி படகு,ரெஸ்கூப் போர்டு,ஆளில்லா விமானத்தின் பறக்கும் கண்காணிப்பு கேமரா மற்றும் உயிர் பாதுகாப்பு உபகரணம் (life buoy) உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி ஒத்திகை
நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மெரினா உயிர் காக்கும் பிரிவு கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 5 மாதத்தில் மட்டும் கடலில் சிக்கி தவித்த 28 உயிர்களை மீட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது