மாற்று திறனாளிகளுக்கு உதவ மாரத்தான் போட்டி... இணையவழி மாரத்தான் போட்டியில் அமைச்சர் பங்கேற்பு...

தடுப்பூசி முகாம் ஒன்றிய அரசை திருப்பி பார்க்க வைத்திருக்கிறது- அமைச்சர் மெகா தடுப்பூசி முகாம் வெற்றி மத்திய அரசை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

மாற்று திறனாளிகளுக்கு உதவ மாரத்தான் போட்டி... இணையவழி மாரத்தான் போட்டியில் அமைச்சர் பங்கேற்பு...

சென்னை பெசண்ட் நகரில் தனியார் அமைப்பு சார்பில்  மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்குவது , தீக்காயம் ஏற்படும் நபர்களுக்கு உதவி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 21 கிலோ மீட்டர்  நடத்தப்பட்ட இந்த இணையவழி மாரத்தான் போட்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பங்கேற்றார்.  

முன்னதாக   செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்றைய தினம்  131 வது 21 கிலோ மீட்டர் மராத்தான் போட்டியில் பங்கேற்றுள்தாகவும்4,  ஓடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக கிடைக்கிறது எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர், கோவில்களை திறப்பது குறித்து ஆலோசித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும், மெகா தடுப்பூசி முகாம் வெற்றி மத்திய அரசை நம் பக்கம் திருப்பி பார்க்க வைத்திருக்கிறது எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.