மன்னார்குடி - மயிலாடுதுறை இடையே 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை - பொதுமக்கள் மகிழ்ச்சி

மன்னார்குடி - மயிலாடுதுறை இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மன்னார்குடி - மயிலாடுதுறை இடையே 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கொரோனா காரணமாக நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக தொடங்கிய நிலையில், மன்னார்குடி - மயிலாடுதுறை ரயிலானது, முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

மன்னை விரைவு ரயில் பெட்டிகளை வைத்து இந்த ரயில் இயக்கப்படுவதால், 18 பெட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும், மூன்று குளிர்சாதன பெட்டிகளை தவிர்த்து மற்ற 15 பெட்டிகளும் முன்பதிவற்ற பெட்டிகள் என்றும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயில் பேரளம், பூந்தோட்டம், நன்னிலம், திருவாரூர் சந்திப்பு, குளிக்கரை, திருமதிக்குண்ணம், கொரடாச்சேரி மற்றும் நீடாமங்கலம் சந்திப்பு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.