தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறக்கும் நோக்கில் நிர்வாகம்  ..! உச்சநீதிமன்றம் அனுமதி...!

ஜிப்சம் அகற்றம்,ஆலை பராமரிப்பு என்ற பெயரில்......

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறக்கும் நோக்கில் நிர்வாகம்  ..!  உச்சநீதிமன்றம் அனுமதி...!

துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையானது மக்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலையில்லா திண்டாட்டத்தில் மக்கள் இருப்பதாகவும், தூத்துக்குடியின் பொருளாதாரமே சரிந்து விட்டது போலவும், அந்த ஆலையால் எந்தக் கேடும் நடக்கவில்லை என்பது போலவும் அவ்வப்போது சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

Role of Christian missionaries in Sterlite protests - வானரம்

மேலும் அவர்கள் அற்ப தொகைகளுக்கு ஆசைப்பட்டு விளைவுகள் மற்றும் உண்மை தெரியாமல் குரல் கொடுப்பதும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதுமாக இருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை ஒரு நல்ல ஆலை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்கக் கோரி ஆதரவளிக்கும் சாதிய, மதவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், காலத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறிருக்க, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டும்,  மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்தும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க   }  "வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஓட்டு பிரச்சினை கிடையாது, சமூக நீதிப் பிரச்சனை"..! - அன்புமணி ராமதாஸ்.

அதாவது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மே-4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருக்கும் நிலையில் ஜிப்சம் அகற்றம்,ஆலை பராமரிப்பு என்ற பெயரில் ஆலையினை திறக்கும் நோக்கில் ஆலை நிர்வாகம்  அனுமதி கோரி அதற்கான அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்றது எனவும், இதற்கு தமிழக அரசு தரப்பில் அனுமதி அளிக்க கூடாது என்றும் வலியுறுத்தி  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பண்டாரம்பட்டி கிராம பகுதி பெண்கள்  மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்,  மதிமுக, முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர்  என 200க்கும் மேற்பட்டோர்  மனுகொடுக்கும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   }  கோவில் நிலம்: பட்டா பெயர் மாற்றம் சாத்தியமில்லை - நீதிமன்றம்