மதுரை மல்லிக்கு கிடைத்தது புவிசார் குறியீடு...

உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை மதுரை மக்கள் வரவேற்றுள்ளனர்.

மதுரை மல்லிக்கு கிடைத்தது புவிசார் குறியீடு...

உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை மதுரை மக்கள் வரவேற்றுள்ளனர்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் மல்லிகை பூ விளைகிறது . இருப்பினும் மதுரை மல்லிக்கு என்று தனி பெருமையும் சிறப்பும் உண்டு. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தினை காப்பதற்கு இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் இது மதுரை மல்லி என்ற பெயரில் மற்ற மல்லிகை பூவை விற்கவும், ஏமாற்றவும் முடியாது. புவிசார் குறியீடு மதுரை மல்லிக்கு கிடைத்துள்ளது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளதோடு, அதன் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஏற்கனவே காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் தட்டு, திண்டுக்கல் பூட்டு, பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு இவையெல்லாம் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் புவிசார் குறியீடுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.