ஒரு வழிப்பாதையாக மாறவுள்ள மாதவரம் நெடுஞ்சாலை…

சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் நடைபெறவுள்ள மெட்ரோப் ரயில் பணிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

ஒரு வழிப்பாதையாக மாறவுள்ள மாதவரம் நெடுஞ்சாலை…

சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் நடைபெறவுள்ள மெட்ரோப் ரயில் பணிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரம்பூர் (செம்பியம்) பகுதியில் உள்ள மாதவரம் நெடுஞ்சாலையில் வரும் 10 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் பணி தொடர்பாக TATA Projects Ltd நிறுவனத்தார் மண் பரிசோதனை பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மாதவரம் நெடுஞ்சாலையானது ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மூலக்கடை மார்க்கத்திலிந்து மாதவரம் நெடுஞ்சாலை வழியாக பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு செல்பவர்கள், லட்சுமி அம்மன் கோவில் தெரு, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, B.B. ரோடு (Birth & Burial Road), பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பெரம்பூர் மார்க்கத்திலிருந்து, மூலக்கடை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் மாதவரம் நெடுஞ்சாலையைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்றார்போல் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.