"சென்னையில் வாக்குப்பதிவு குறைவு".. இது தான் காரணமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னையில் ஏன் வாக்குப்பதிவு குறைந்தது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

"சென்னையில் வாக்குப்பதிவு குறைவு".. இது தான் காரணமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை,

தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 60.70 வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், இதில் சென்னையில் மிக குறைந்த வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2011 ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 52.67 சதவீத வாக்குகளும், அதே ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயருக்கான வாக்குப் பதிவில் 52.67 சதவீத வாக்குகளும் பாதிவாகின. கடந்த சட்டபேரைவை தேர்தலில் 59.06 சதவீத வாக்குகள் பதிவாகின..

இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் 50 சதவீதிற்கும் மேல் தான் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் வெறும் 43.59 சதவீத வாக்குகள் பட்டுமே பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது.. நேற்று நடைபெற்ற தேர்தலில் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.. படித்த மேதைகள் வாக்களிக்க வர வேண்டும். சென்னையில், வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு வெறுப்பு காரணமல்ல, நேற்று ஏராளமானோர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர் என்றார்.