கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவது சாமானிய மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. 

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு.. பொதுமக்கள் மகிழ்ச்சி

மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியிருந்தது. விலை உயர்வால் காய்கறிகளை வாங்க முடியாமல் சாமானிய மக்கள் திணறி வந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. 

இந்த நிலையில், கிலோ தக்காளி 20 முதல் 30 ரூபாய்க்கு விலை போகிறது. இதேபோல் கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, உருளைக்கிழங்கு உள்ளிட்ட மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதால், சாமானிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தற்போது தினசரி விற்பனையில் காய்கறிகளின் விலை ஏற்றமின்றி ஒரே விலைக்கு விற்கப்படுவதாகவும், வரும் நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.