7, 8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு...!

7, 8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு...!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60 இடங்களில் கனமழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வுமைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 7, 8 ஆகிய தேதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறினார். 

இதையும் படிக்க : 12 வது அமைச்சரவை கூட்டம்... திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அறிவுறுத்தல்...!

மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளது எனவும், அடுத்து வரும் 2 தினங்களுக்கு திருச்சி, மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறினார்.