சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்.. ஈபிஎஸ் தீர்மானத்துக்கு விளக்கமளித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

திருவண்ணாமலையில் விசாரணைக் கைதி சிறையிலேயே உயிரிழந்த விவகாரத்தில், வழக்கை விசாரித்த அமலாக்கத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார் .

சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்.. ஈபிஎஸ் தீர்மானத்துக்கு விளக்கமளித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

திருவண்ணாமலை அருகே தண்டராம்பட்டு தட்டரணை கிராமத்தை சேர்ந்த தங்கமணி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட அவர் திடீரென உடல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது கணவனைக் காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாக தங்கமணியின் மனைவி மலர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்த தீர்மானத்துக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கில் தொடர்புடைய அமலாக்கப் பிரிவினர், காவல்துறையினர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதையும், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.