வடமாநில தொழிலாளர்களால் உள்ளூர் ஆட்களுக்கு வேலை இல்லை....! விவசாயிகள் பொதுமக்கள் வேதனை...!

வடமாநில தொழிலாளர்களால் உள்ளூர் ஆட்களுக்கு வேலை இல்லை....!  விவசாயிகள்  பொதுமக்கள் வேதனை...!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் நடவு பணிகளை வடமாநில தொழிலாளர்களைக் கொண்டு  மேற்கொள்ளப்படுவதால் உள்ளூர் பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெமிலி அடுத்த  சிறுவளையம் கிராம பகுதியில் சுபாஷ் என்பவருக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு  கொண்ட விவசாய நிலத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஏக்கருக்கு நான்காயிரத்து 500 ரூபாய் வீதம் ஊதியம் பெற்றுக் கொண்டு நெற்பயிர் நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதே வேளையில், உள்ளூர் பணியாளர் ஏக்கருக்கு 5ஆயிரத்து 500 ரூபாய் இரண்டு வேளை உணவு மற்றும் போக்குவரத்து செலவு என மொத்தம் 6 ஆயிரத்து 500  ரூபாய் என அதிகமாக செலவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. 

நெற்பயிர் நடவு பணிகளுக்கு உள்ளூர் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு நெற்பயிர் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உள்ளூர் நெற்பயிர் நடவு பணியாளர்களின் வாழ்வியல் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளது.

 இதையும் படிக்க;... வனத்துறை மேம்பாட்டிற்கான 7 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு...!

நெமிலி அடுத்த சிறுவளையம் கிராம பகுதியில் சுபாஷ் என்பவருக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் வட மாநில தொழிலாளர்கள் நெற்பயிர் நடவு பணியில் ஈடுபட்டு அசத்தி வருகின்றனர். அவர்கள்  ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு 4500 ரூபாய் தொகையை ஊதியமாக பெற்று நெற்பயிர் நடவு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் உள்ளூர் நெற்பயிர் நடவு பணியாளர்கள் இரண்டு நாட்கள் செய்கின்ற நடவு பணிகளை ஒரே நாளில் வட மாநில தொழிலாளர்கள் செய்து முடிப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர்  நடவு பணியாளர்கள் ஒரு ஏக்கர்  பரப்பளவுக்கு நெற்பயிர் நடவு செய்வதற்கு 5500 தொகையினை பெறுவதாகவும்,  இரண்டு வேளை உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் என மொத்தமாக 6500 ரூபாய் ஆகும் பட்சத்தில் நில உரிமையாளர்களுக்கு அதிகப்படியான பண செலவுகள் ஏற்படுவதாகவும் மேலும் தற்போது நெற்பயிர் நடவு பணிகளை மேற்கொள்வதற்கான ஆட்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

 இதையும் படிக்க;... ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள்...நீரில் மூழ்கி 4 பேர் மாயம்!

எனவே தற்போது வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு நெற்பயிற் நடவு பணியில் மேற்கொண்டு வருவது,  கால நேரம் மற்றும் பணம் செலவின தொகையை குறைத்து நில உரிமையாளர்களுக்கு லாபம் ஈட்டும் விதமாக அமைந்திருப்பதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதன் மூலமாக உள்ளூர் நெற்பயிர் நடவு பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.