உள்ளாட்சி தேர்தல் புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை அறிவித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்,  புகார் மையம் ஒன்றையும் அமைத்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை அறிவித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்,  புகார் மையம் ஒன்றையும் அமைத்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த  மாதம்  6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது இதற்கான வேட்பு  மனு தாக்கல்  இன்று  தொடங்கிய நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 என்ற எண்களில் தெரியப்படுத்தலாம் என  தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் ஏதும் இருந்தால் அதனை பெறுவதற்காக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் "புகார் மையம்" அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் 24  மணி நேரமும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.