கோயில் அருகில் இயங்கி வரும் மதுபானக்கடை...! அகற்ற கோரிய வழக்கு விசாரணை..!

கோயில் அருகில் இயங்கி வரும் மதுபானக்கடை...! அகற்ற கோரிய வழக்கு விசாரணை..!

சேலம் லீ பஜார் ஆஞ்சநேயர் கோயில் அருகில் இயங்கிவரும் மதுபானக்கடையை அகற்றக் கோரிய வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், சேலம் மாநகர் பகுதியில் உள்ள லீ பஜார் மேம்பாலத்தின் கீழே உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோவயிலின் தொன்மை வாய்ந்த தூண்கள் பாதுகாப்பற்ற நிலையில் பக்தர்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அபாயகரமாக இருப்பதாகவும், கோவிலை ஒட்டியே மதுபானக் கடை மற்றும் பார் இயங்கி வருவதாகவும் இது குறித்து தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க : வரதட்சணை கொடுமை வழக்கில் ஓராண்டாக தேடப்பட்ட குற்றவாளி...! விமான நிலையத்தில் கைது...!