லைக் வாங்க பேஸ்புக், வாட்ஸ் ஆப்ல போட்டோ போட்டா அதுக்கு பேரு வேற... பெண்கள் குறித்து சபரிமாலா பேச்சுக்கு எதிர்ப்பு...

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவரும், முன்னாள் ஆசிரியருமான சபரி மாலா தனது கட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

லைக் வாங்க பேஸ்புக், வாட்ஸ் ஆப்ல போட்டோ போட்டா அதுக்கு பேரு வேற... பெண்கள் குறித்து சபரிமாலா பேச்சுக்கு எதிர்ப்பு...

நீட் தேர்வுக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து பேசி, போராடி வந்தவர் முன்னாள் ஆசிரியர் சபரிமாலா. மதுரை ஆத்திகுளத்தில் பிறந்த இவர் நீட் மட்டுமின்றி பல்வேறு சமூக ரீதியான பிரச்சனைகளில் முற்போக்கான கருத்துக்களை தெரிவித்தும் வந்து இருக்கிறார். பெண் விடுதலை முக்கியமாக பெண் விடுதலை, சுதந்திரம் தொடர்பாக பல்வேறு மேடைகளில் மேடை பேச்சாளராக இவர் பேசி இருக்கிறார். பெண் விடுதலைக் கட்சி என்ற பெயரில் அரசியல் அமைப்பை தொடங்கி இவர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில்தான் இவரின் பெண் விடுதலைக் கட்சி கூட்டம் ஒன்றில் சபரிமாலா பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக புகைப்படம் வெளியிடுவதை பற்றி சபரிமாலா பேசி உள்ளார். அதில், என்னுடைய படத்தை மேக்கப் போடு போட்டு. எதில் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸில் படத்தை போட்டு. நான் ரொம்ப அழகாக இருக்கிறேன் என்ற எண்ணத்தில் அதை போட்டு. ரொம்ப அழகா ஒரு படத்தை அப்லோட் செய்து, யாராவது ஒரு ஆண் இதை பார்க்க வேண்டும். லைக் போட வேண்டும், ஹார்டின் விட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் போஸ்ட் போட்டால். என்னுடைய அழகை நான் எக்ஸ்போக்ஸ் செய்கிறேன் என்றால் அது விபச்சாரம்தான் என்று சபரிமாலா தனது உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இவரின் பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பெண்களுக்கு எதிராக அவர் பேசி உள்ளதாக ஒரு சாரார் இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டு, இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொருசாரர், இவர் பேசியதில் தவறு இல்லை. சமூக வலைதளங்களில் ஆபாச படம் வைக்க கூடாது என்று தான் சபரிமாலா சொல்கிறார். படமே வைக்க கூடாது என்று அவர் கூறவில்லை. அவர் தவறாக எதுவும் பேசவில்லை, என்று விளக்கம் அளித்து ஆதரவாக பேசி உள்ளனர்.