மெட்ரோ ரயில் பணியில் கவனக் குறைவு; வீடு சேதம்!

மெட்ரோ ரயில் பணியில் கவனக் குறைவு; வீடு சேதம்!

சென்னை போருரில் மெட்ரோ ரயில் பணிக்காக பயன்படுத்தப்படும்  ராட்சத துளையிடும் இயந்திரம் மோதிய விபத்தில்  வீடு உடைந்து சேதமானது. இந்த விபத்தில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த 3 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். 

சென்னை, போரூர் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெட்ரோ பணியாளரின் கவன குறைவால் சாலையில் துளையிட பயன்படுத்தப்படும் ராட்த இயந்திரம் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து விழுந்தது. இதனை கண்ட பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.  எனினும் வீட்டில்  இருந்த  பிரோ,கட்டில்,பேன் போன்ற பொருள்கள் சேதமடைந்தன

இதையடுத்து மெட்ரோ ரயில் கட்டுமான  ஊழியர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும்  சேதமடைந்த வீட்டுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது. 

இதையும் படிக்க:மேலும் 2 அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு விசாரணை; உயர்நீதிமன்றம் அதிரடி!