கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் - பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

நெல்லையில் உள்ள கூந்தங்குளம் பறவைகள் சரணாலயாத்திற்கு வரும் பறவைகளின் கணக்கெடுப்பை மாவட்ட வன அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார்.

கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் - பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு வனத்துறை சார்பில் ஆண்டும் தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. கூந்தன்குளம், திருப்புடைமருதூர், ராஜவல்லிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 18 முக்கியமான குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கணக்கிடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளதால் பறவைகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.