திமுக கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் ஒதுக்கீடு....யார் யாருக்கு எந்த எந்த தொகுதி தெரியுமா?

திமுக தலைமையிலான கூட்டணியில்  காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகர மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு  பதவிகள் ஒதுக்கீடு....யார் யாருக்கு எந்த எந்த தொகுதி தெரியுமா?

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திமுக தலைமையிலான கூட்டணியில் மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் துணைத்தலைவர் இடங்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், காங்கிரஸ் கட்சிக்கு  கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியும், சேலம், காஞ்சிபுரம் துணை மேயர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியை விட்டுக் கொடுக்க திமுக  முன்வந்துள்ளது.

அதேபோல் மதிமுகவிற்கு ஆவடி மாநகராட்சியில் துணை மேயர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு துணை மேயர் பதவி இடங்களை ஒதுக்கீடு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகளுக்கு கடலூர் துணை மேயர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  திருப்பூர் துணை மேயர், மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  மதுரை துணை மேயர் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று மாலை திமுக வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி ஆனது 21 மாநகராட்சியையும் கைப்பற்றியது,மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளை கைப்பற்றியது,489 பேரூராட்சிகளில் 435 பேரூராட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.