கும்பாபிஷேக விழாக்கள்... சாமி தரிசனம்!!

கும்பாபிஷேக விழாக்கள்... சாமி தரிசனம்!!

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், திம்மசமுத்திரம் கிராமத்தில் பழமையான பெருமாள்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மாரமரத்து பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இன்று குடம்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள உத்தமர் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, ஏராளமாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கொப்பரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பத்தினி நாச்சியம்மன் ஆலயத்தில் மூன்று கால பூஜைகளுடன் இன்று கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டனர்.  

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நர்மா கிராமத்தில் அமைந்துள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர். அதன்பின் வலம்புரி செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.

இதையும் படிக்க:   கரையை கடந்த அதி தீவிர மோச்சா புயல்...!!!