கிருஷ்ணகிரி: அரசு மருத்துவமனைக்கு செல்லும் தார் சாலை.. குண்டும் குழியுமாக இருப்பதால்  நோயாளிகள் அவதி!!

போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால்  நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: அரசு மருத்துவமனைக்கு செல்லும் தார் சாலை..  குண்டும் குழியுமாக இருப்பதால்  நோயாளிகள் அவதி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நோயாளிகள், கர்பிணி பெண்கள் உள்ளிட்டோர் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையை நாடுகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் தார் சாலை சேதமடைந்த நிலையில், குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பொதுவாக,  ஆட்டோ, கார் மற்றும் இருச்சக்கர வாகனங்கள் மூலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், குண்டும், குழியுமான சாலையால் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றன். அதிலும், 108 ஆம்புலன்றில் வரும் கர்ப்பிணிப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்த சாலை வழியாக அரசு பள்ளிகள், நூலகம், பத்திர பதிவு அலுவகம் என அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்கு வரும் மாணவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைத்துதர  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.