கிண்டி பன்னோக்கு மருத்துவமனை இன்று திறப்பு!

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை இன்று திறப்பு!

சென்னை, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சுமார் 240 கோடி ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் ஆயிரம் படுக்கைகளுடன் தரைத்தளம் மற்றும் ஆறு மேல் தளங்களுடன் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பன்னோக்கு மருத்துவமனையில் இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் - இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை துறைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வைப்பார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வரும் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

இதையும் படிக்க:https://www.malaimurasu.com/Complaint-that-Senthil-Balaji-threatened-the-officials-of-the-enforcement-department