தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ் நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் கருணாநிதி: குடியரசு தலைவர் ராம் நாத்  கோவிந்த் புகழாரம்...

தம்முடைய புரட்சிகர எண்ணங்களால் சமூகத்தில் பெரும் சீர்த்திருத்தங்களை செய்து விழிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என குடியரசு தலைவர் ராம் நாத்  கோவிந்த் புகழாரம் சூட்டினார்.......

தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ் நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் கருணாநிதி: குடியரசு தலைவர் ராம் நாத்  கோவிந்த் புகழாரம்...

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் , முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவபடத்தை திறந்து வைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கிய குடியரசு தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்,

இந்த நாள்  உண்மையில் வரலாற்று முக்கியத்துவனம் வாய்ந்த நாள் என்று பதிவு செய்த குடியரசு தலைவர் கோவிந்த்,  மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் என்ற மாக கவி பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி  தமிழக பேரவையின் சிறப்புகளை விவரித்தார் . தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ் நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் கருணாநிதி என்றும்  தேவதாசி முறை ஒழிப்பு , சத்துணவு திட்டம் போன்ற முக்கிய மக்கள் நல திட்டங்களை நாட்டுக்கு தந்தவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.

சுதந்திர போராட்ட காலத்திலேயே அரசியல் வாழ்க்கையை தொடங்கி இளம் வயதிலேயே அரசியில் களம் கண்டவர் கருணாநிதி என்றும்   இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதி என்றும் பெருமிதம் தெரிவித்தார். தம்முடைய புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி, தமிழ் மொழிக்கும்  இலக்கியத்துக்கும் தமிழ் திரைஉலகிற்கும்  பெரும் பங்காற்றியவர் கருணாநிதி என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார்.