உதயநிதி கருத்தை திருத்தி சொல்பவர்களுக்கு கார்த்தி சிதம்பரம் கண்டனம்!

உதயநிதி கருத்தை திருத்தி சொல்பவர்களுக்கு கார்த்தி சிதம்பரம் கண்டனம்!

உதயநிதி கருத்தை திருத்தி அதை திசைத் திருப்பிச் சொல்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகங்கை மக்களை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவித்ததற்கு நியாயமான உத்தரப்பிரதேச அரசாங்கம் இருந்தால் சாமியார் என கூறிக் கொள்ளும் நபரை கைது செய்து இருக்க வேண்டும் அங்கு நடப்பதோ புல்டோசர் அரசாங்கம் அவர்களிடம் இருந்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் இத்தகைய வன் செயல்களை செய்யும் இயக்கங்களை கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக்கொளவதாக தெரிவித்தார்.  

உதயநிதி சனாதனத்தை பின்பற்றுபவரகளை அழிக்க வேண்டும் எனக் கூறியதாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாரே தவிர சனாதனத்தையோ அல்லது ஒரு மதத்தையோ பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என்று கூறவில்லை. இனப்படுகொலை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அவரது கருத்துக்கு நான் முழுமையாக உடன்படுகிறேன் அவர் தமிழ்நாட்டை பொருத்தவரை சனாதனம் என்பது சாதிய ஏற்றத்தாழ்வை குறிப்பதாகவே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளாகவே பெரியார் அண்ணா காமராசர் உள்ளிட்டோர் குரல் கொடுத்தே வந்துள்ளனர். இவர்களிள் வழியிலே உதயநிதி இப்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவர் கருத்தை திருத்தி அதை திசைத் திருப்பிச் சொல்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.  

தொடர்ந்து பேசிய அவர், என்னைவிட அதிகமாக கோயில்களுக்க செல்லக் கூடிய அரசியல் தலைவரை நீங்கள் பார்க்க முடியாது எனக் கூறிய அவர், இன்று சனாதனத்திற்காக குரல் கொடுக்கும் பாஜகவின் முன்னாள், இன்னாள் தலைவர்களின் இளம் வயதிலே அவர்களது பெற்றோர் சனாதனத்தை கட்டிக்காப்பதற்காகவா அவர்களை கோயிகளுக்கு அழைத்து சென்றார்கள் எனக்  கேள்வி எழுப்பினார்.  

சந்திரயான் 3, ஆதித்யா ட 1 வெற்றிக்கு காரணம் பிஜேபியினர்தான்  கூறுவதை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், விஞ்ஞானம் என்பது படிப்படியாக ஒவ்வொரு படியாக முன்னேறி  வருவது. ஒரு கண்டுபிடிப்பின் வளர்ச்சிதான் இன்னொரு கண்டுபிடிப்பு. தற்போது ஸ்மார்போனை தயாரிப்பவர்கள் தாங்கள் தான்  எல்லா மொபைல் போனையும் கண்டுபிடித்தாக சொல்லமுடியுமா?  அதுபோல இஸரோ 60 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக் கூடியது எனவே அதன் வளர்சிக்கு அனைவருமே சொந்தம் கொண்டாடலாம். குறிப்பாக விஞ்ஞானிகள் சொந்தம் கொண்டாடலாம் என தெரிவித்தார்.  

திமுக அதிமுக உள்ளூர் எதிரி பாஜக காங்கிரஸ் வெளியூர் எதிரி என நாம் தமிழர் கட்சியின ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சீமானுக்கு ஒரு நிரந்தரமான கொள்கை கிடையாது. அவருக்க இருக்கும் வாக்கு வங்கி மாறும் தன்மையுடையது. ஒரு தேர்தரலி அவருக்கு வாக்களித்தவர்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களிப்பதில்லை. அவர் கட்சியில் வேட்பாளராக நிற்பவர் கூட அடுத்த தேர்தலில் அந்த கட்சியில் இருப்பதில்லை. இதற்கு 100 கணக்கான உதாரணங்கள் உள்ளன. சீமானும் அண்ணாமலையும் மீடியாக்களுக்கு தீனி போட வேண்டும் என்பதற்காக இவர்கள் பேசி வருகின்றனர் என பதிலளித்தார். 

இதையும் படிக்க: மாறுகிறது இந்திய நாட்டின் பெயர்?