"காவிரியில் தண்ணீரை திறந்துவிட கர்நாடக பா.ஜ.க. எதிர்க்கிறது" கே.எஸ்.அழகிரி பேட்டி!

காவிரியில் தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசு திறந்து விட்டு கொண்டு உள்ளது. பா.ஜ.க. தான் எதிர்க்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஐதராபாத்தில் நடக்கும் காங்கிரஸ் செயற் குழு கூட்டம் திருப்பு முனையை ஏற்படுத்தும். 2024ம் ஆண்டு தேர்தலில் இந்தியாவில் ஒரு மாற்றத்தை கொண்டு வர காங்கிரஸ் கட்சி செயற் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 

சமூகத்தில் உள்ள நல்லிணக்கத்தை மாற்றுவதற்காக மக்களிடையே உள்ள ஒற்றுமையை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. முயற்சி செய்வதை கண்டிக்கிறேன். சனாதன பற்றி பசி ஒரு வார காலம் விரயம் செய்தார்கள். தேர்தல் தோல்விக்காக வேறு வேறு வகையில் செய்கிறார்கள் எனக் கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், காவேரி பிரச்சனை முடியாதோ பூதாகரமானதோ அல்ல.  காவேரி விவகாரத்தில் அரசியல் செய்வதே பா.ஜ.க. தான். பா.ஜ.க. வால் தான் தண்ணீர் வரவில்லை. வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதும் 5 ஆயிரம் கன அடி திறந்தார்கள். காவேரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது. தண்ணீர் திறந்ததும் கர்நாடக பா.ஜ.க. எதிர்த்தார்கள். தமிழக பா.ஜ.க. தண்ணீர் ஏன் கொண்டு வரவில்லை என கேட்கிறது. கர்நாடக பா.ஜ.க. ஏன் திறந்து வீட்டீர்கள் என கேட்கிறது. காங்கிரஸ் அரசு தண்ணீரை திறந்து விட்டது. பா.ஜ.க. தான் பிரச்சனை செய்கிறது. அதை மீறி தண்ணீர் கொண்டு வருவோம். அது நமது உரிமை. வர வேண்டிய தண்ணீர் கண்டிப்பாக வரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்க: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!