காஞ்சிபுரம்: தாயார் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்!!

காஞ்சிபுரம்: தாயார் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்!!

காஞ்சிபுரம் தாயார் குளத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

45-வது வார்டில் உள்ள தாயார் குளத்தில் கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் ஆண்டுதோறும்  நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அமாவாசையன்று குளக்கரையில் முன்னோருக்கு திதி கொடுக்கும் பலரும் தயிர், பால், எள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பிளாஸ்டிக் பை கழிவுகளை குளத்தில் வீசி விட்டுச் சென்று விடுகின்றனர்.

இதனால் குளம் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் தாயார் குளத்தில் குவிந்து  கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.