கோவில்பட்டியில் மகாகவியின் 101வது நினைவு தினக் கொண்டாட்டம்!!!

மகாகவி பாரதியார் 101வது நினைவு தினத்தை ஒட்டி, பாரதியார் திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மகாகவி பாரதியார் வேடம் அணிந்த குழந்தைகள் மலர்தூவி மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.

கோவில்பட்டியில் மகாகவியின் 101வது நினைவு தினக் கொண்டாட்டம்!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் 101வது நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது  திருவுருவ சிலைக்கு தமிழக அமைச்சர் கீதா ஜீவன்  மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதே, போன்று மகாகவி பாரதியார் வேடம் அணிந்த குழந்தைகளும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தனது பாடல், கவிதை, உரைநடை மூலமாக இந்திய மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய மகாகவி பாரதியார் 101 வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பாரதியாரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு தமிழக அரசு நினைவு தினத்தை மகாகவி நாள் என்று கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.

மகாகவி பாரதியார் 101வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவ சிலைக்கு தமிழக சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர்  கீதா ஜீவன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் மகாகவி பாரதியார் வேடம் அணிந்த குழந்தைகள் மகாகவி திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.