நீர்வரத்து கால்வாயை ஆக்ரமித்து சுகாதார வளாகம்... ஒரு செங்கல் கூட இருக்கக் கூடாது... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...

நீர் வழி பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானத்தில் ஒரு செங்கல் கூட அங்கு இருக்க கூடாது உடனடியாக கட்டுமானத்தை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

நீர்வரத்து கால்வாயை ஆக்ரமித்து சுகாதார வளாகம்... ஒரு செங்கல் கூட இருக்கக் கூடாது... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...
புதுக்கோட்டை வலையன் வயல் கிராமத்தை சேர்ந்த சரவணன்,  என்பவர் தாக்கல் செய்த மனுவில் புதுக்கோட்டை  திருமயம்  அருகே  வலையன் வயல் கிராமம்  உள்ளது.  எங்கள் ஊரில் உள்ள வளையம் கண்மாய்க்கு வரும்  நீர் வரத்து கால்வாயில்  சமுதாய சுகாதார வளாகம் அமைக்க. கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.  அப்பகுதி  பொதுமக்களிடம் எந்தவித கருத்துகளையும் கேட்காமல் ஊராட்சி மன்ற தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்க்கு வரும்  வரத்து கால்வாயை  ஆக்கிரமித்து சுகாதார வளாகம் அமைத்து வருகின்றனர். 
 
இதனால் அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உட்பட அனைத்து கழிவுகளும் வளையன் கண்மாய்க்கு செல்லும்  கால்வாயில் கலந்து  மாசு வாய்ப்பு  உள்ளது.  எனவே, விவசாயிகளின் நலன் கருதி   கண்மாய்  நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமித்து சுகாதார வளாகம் கட்டும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்தமனு  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி,  நீதிபதி சிவஞானம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது மனுதாரர் தரப்பு ,  நீர் வழி வாய்க்காலை ஆக்கிரமித்து,  சுகாதார வளாகம் கட்டுகின்றனர். இதனால் நீர் வரத்து பாதிக்கப்படுவதோடு,  கண்மாய் நீரும் மாசுபடும் நிலை ஏற்பட்டு உள்ளது.  அரசு தரப்பு கூறுகையில், சுகாதார வளாகம்   கட்டுமானம் நிறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த , கண்மாய்க்கு நீர் வரும்  நீர் வரத்து கால்வாயை ஆக்கிரமித்து, ஊராட்சி மன்ற தலைவரே இவ்வாறு சுகாதார வளாகம் கட்டலாமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீர் வழி பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானத்தில் ஒரு செங்கல் கூட அங்கு இருக்க கூடாது  என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  உடனடியாக கட்டுமானத்தை அகற்ற உத்தரவிட்டார்.